காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
திருத்துறைப்பூண்டி அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விக்கிரபாண்டியத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சுமதி. இவர்களது மகள் பிரியா (வயது24). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராயநல்லூரை சேர்ந்த கருணாநிதி மகன் சத்யராஜ் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சத்யராஜ் சென்னையில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் திடீரென பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரியாவின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அன்னைஅபிராமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட பிரியாவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி விசாரணை நடத்துகிறார்.

Related Tags :
Next Story