ஊத்துக்காடு ஊராட்சியில் மகளிர் குழுவினருக்கு ரூ.1½ கோடி கடனுதவி கலெக்டர் தகவல்


ஊத்துக்காடு ஊராட்சியில் மகளிர் குழுவினருக்கு ரூ.1½ கோடி கடனுதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2018 3:30 AM IST (Updated: 16 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு ஊராட்சியில் 30 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.1½ கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது. காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு ஊராட்சியில் மொத்தம் 30 சுயஉதவிக்குழுக்கள் உள்ளது. இந்த குழுவில் 12 முதல் 15 உறுப்பினர்கள் வரை உள்ளனர். 30 குழுவில் ஒவ்வொரு குழுவினருக்கும் தலா ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மானியமாக ரூ.1¼ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் ரூ.1½ கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் அரசு மானியமாகும்.

இந்த சுயஉதவிக்குழுவினர் சொந்த நிலத்தில் சுயதொழில் செய்து மாதம் ஒரு நபர் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் மகளிர் நல்ல சுயலாபம் அடைந்து பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனுவாசராவ், உதவி திட்ட அலுவலர்கள் மோகன்பாபு, செந்தில்குமார், ராமதாஸ், மாவட்ட விற்பனை சங்க மேலாளர் எழிலரசன் உடனிருந்தனர்.

Next Story