பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.12.29 கோடியில் தார் சாலைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.12.29 கோடி மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தாலுகா செங்குணம் முதல் கவுல்பாளையம் வரை 1.2 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் அய்யலூர் குடிகாடு பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில், பாரத பிரதமர் கிராம சாலைத்் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.12.29 கோடி மதிப்பீட்டில் 10 தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் விவசாய பயன்பாட்டிற்கு தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் இயற்கை வள மேம்பாட்டு பணிகளின் கீழ் மழை நீர் சேகரிப்பு மற்றும் மண் வளப்பாதுகாப்புப்பணிகளுக்காக ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள், புதிய குட்டை அமைத்தல், குட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பண்ணைக் குட்டை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட மேலாளர் ஸ்ரீதர், வேளாண்மை துணை இயக்குனர் முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் பழனிசாமி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் குழு உறுப்பினர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, பெரம்பலூர் தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story