பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:35 AM IST (Updated: 16 Jun 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்,

ஒப்பந்த ஊழியர்கள் 250 பேருக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 2 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, முன்னாள் செயலாளர் ஞானசேகரன் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story