பழுதான மின்மோட்டாரை சரி செய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு
பழுதான மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்துக்கு முயன்றனர்.
திருவண்ணாமலை,
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதலம்பாடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதற்காக திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திறந்த வெளி கிணற்றில் உள்ள மின் மோட்டார் கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் இருந்து வந்தது. பொதுமக்கள் குடிநீருக்காக அருகே உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து உள்ளனர்.
தற்போது விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வற்றிபோனதால் குடிநீருக்காக அலைமோதி வந்தனர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாதலம்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story