சுற்றுலாத்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
சுற்றுலாத்துறையில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை போளூர் சாலையில் சுற்றுலா துறையின் தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓட்டல் விடுதியில் தங்கி இருந்தவர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதாக என்று கேட்டார்.
இதையடுத்து சமையல் அறையையும் பார்வையிட்டார். அப்போது பாத்திரங்கள் இருந்த இடத்தில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அடுத்தமுறை பார்க்கும்போது சுத்தம் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணியாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களை ஈர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் சுற்றுலாத் துறை சார்பில் அமைத்து தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து பேசி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வாதுமலையில் கோடை விழா இன்று தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளேன்.
மக்கள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாத்துறை சார்பில் பார்வையிட்டு அதற்கு தேவையான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ஜவ்வாதுமலைக்கும் அதிக மக்கள வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலெக்டர் மூலம் திட்ட அறிக்கை சமர்பித்து நிதி ஒதுக்கி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எண்ணற்ற கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன. அதனால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அதனால் தமிழக சுற்றுலா துறை இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேலும் கடந்த 2015-16-ம் நிதியாண்டில் சுற்றுலாத்துறை ரூ.1.5 கோடி நஷ்டத்தில் செயல்பட்டது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.5.3 கோடி லாபத்தை பெற்று உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.24.5 கோடி லாபம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஜவ்வாது மலை கோடை விழா, கோடை காலங்களில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story