மும்பை ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அந்த குண்டு சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் மர்மஆசாமி ஒருவர் நேற்று மதியம் போனில் மிரட்டல் விடுத்து உள்ளார். இதையடுத்து ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப் பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைந்து மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் பயணிகளின் உடைமை களிலும் சோதனையிட்டனர். மின்சார ரெயில்களிலும் போலீசார் சோதனை செய்தனர். இதனால் ரெயில் நிலையங்களில் பெரும் பரபரப்பு உண்டானது. பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். இருப்பினும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இதற்கிடையே மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள வித்தல்வாடி ரெயில் நிலையத்துக்கும் மர்மஆசாமி போனில் ெவடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து 2 இடங்களிலும் விடுத்த ெவடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story