நாகை-தஞ்சாவூர் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு-சாலை மறியல் போராட்டம்
நாகை-தஞ்சாவூர் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய வர்த்தக தொழிற்குழுமம் கூறியுள்ளது.
நாகப்பட்டினம்,
நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் நாகை, திருவாரூர், கீழ்வேளூர், மன்னார்குடி ஆகிய எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாகை-தஞ்சாவூர் சாலை பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டு காலமாகியும் சாலைப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில், குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங் களில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகின்றனர். சாலை விபத்துக்களும் அதிக அளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கேட்டால், இந்த சாலை பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறைத்தான் செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கேட்டால் மாநில நெடுஞ்சாலைத்துறை தான் செய்ய வேண்டும் என்றும் மாறி, மாறி தெரிவிக்கின்றனர். இதனால் சாலை பணிகள் முடிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
நாகை-தஞ்சாவூர் வரை நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் கடிதம் வரப்பெற்றது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லாமல் சாலை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
எனவே 19-ந் தேதி நடைபெற உள்ள இந்திய வர்த்தக தொழிற்குழும செயற்குழு கூட்டத்தில் அனைத்து சேவை சங்கங்களையும் அழைத்து கலந்து ஆலோசனை செய்து, நாகை-தஞ்சாவூர் சாலையை உடனே சீரமைத்து, புதிய சாலை அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story