ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
மும்பையில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நகர் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
மும்பை,
இஸ்லாமிய மக்கள் தங்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தனர். மாதம் முழுவதும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. ரம்ஜான் மாத இறுதி வாரத்தில் பெண்கள் தங்களுக்கான ஆயத்த ஆடைகள், நகைகள், குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பேன்சி பொருட்கள் ஆகியவற்றை கடைகளில் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளான மஸ்ஜித்பந்தர், டோங்கிரி, பாந்திரா, சாக்கிநாக்கா, கோவண்டி, மான்கூர்டு, தாராவி, மாகிம், ஜோகேஸ்வரி, வடலா போன்ற பகுதிகளிலும், தானேயில் மும்ரா, பிவண்டி, மிராரோடு மற்றும் மான்பாடா போன்ற பகுதிகளில் ரம்ஜானுக்கான ஷாப்பிங் ஜோராக நடந்தது. ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே உற்சாகம் களைகட்டியிருந்தது.
இந்தநிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். புத்தாடை அணிந்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ரம்ஜான் பெருநாளில் மகிழ்ந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள், தானே, வசாய், நவிமும்பை ஆகிய அனைத்து இடங்களிலும் இஸ்லாமியர்கள் பெருமளவில் கூடி தொழுகை நடத்தினார்கள்.
மும்பை பாந்திரா ரெயில் நிலையம் முன் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story