கோரேகாவ் - பன்வெல் இடையே மழைக்காலத்துக்கு பிறகு மின்சார ரெயில் சேவை


கோரேகாவ் - பன்வெல் இடையே மழைக்காலத்துக்கு பிறகு மின்சார ரெயில் சேவை
x
தினத்தந்தி 17 Jun 2018 5:42 AM IST (Updated: 17 Jun 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

கோரேகாவ் - பன்வெல் இடையே மழைக்காலத்துக்கு பின்னர் தான் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

மும்பை,

மும்பை துறைமுக ரெயில் வழித்தடம் அந்தேரியில் இருந்து கோரேகாவ் வரையிலும் நீட்டிக்கப்பட்டது. கோரேகாவ் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. துறைமுக வழித்தடத்தில் அந்தேரி - பன்வெல் இடையே தினசரி 18 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவைகளை கோரேகாவ் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே மேற்கொண்டு வந்தது.

இதன் காரணமாக இந்த மாதத்திலேயே கோரேகாவ் - பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களினால் அந்தேரி - பன்வெல் இடையிலான மின்சார ரெயில் சேவைகளை கோரேகாவ் வரை நீட்டிப்பதற்கு தற்போது வாய்ப்பு இல்லை. மழைக்காலம் முடிந்த பின்னர் தான் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story