பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசு


பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 Jun 2018 12:57 PM IST (Updated: 17 Jun 2018 12:57 PM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பாட்டில்களை கையாளும் மெஷின்கள் ரெயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தூக்கி வீசப்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை கையாளும் மெஷின்கள்
ரெயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தூக்கி வீசப்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை ஓரிடத்தில் குவித்து அப்புறப்படுத்தும் நோக்கில் தானியங்கி மிஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பயணிகள் போடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் நொறுக்கப்பட்டு, மறுசுழற்சி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள ரெயில் நிலையங்களில் படிப்படியாக பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் மிஷின்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மெஷினில் போடுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் தென்மேற்கு ரெயில்வே ஈடுபட்டுள்ளது. பயணிகள் போடும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கும் ஐந்து ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் பாட்டிலை மிஷினுக்குள் நுழைக்கும்போது தங்களுடைய செல்போன் எண்ணை திரையில் பதிவு செய்தால் போதும். பே டிஎம் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுபற்றிய குறுஞ்செய்தியும் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மிஷினில் தினமும் 5 ஆயிரம் பாட்டில்களை போட முடியும். அந்த பாட்டில்கள் நொறுக்கப்பட்டு பிளாஸ்டிக் துண்டுகளாக மாற்றப்பட்டுவிடும். அவைகளை கொண்டு டி-சர்ட், பைகள் போன்ற மறுசுழற்சி பொருட்களை தயாரிக்கலாம்.

Next Story