தகுதியானவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்
தகுதியானவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் துறைமங்கலம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சேவு வரவேற்றார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பொன் ஆனந்தராசு, மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, பொது சுகாதார துறை அலுவலர் சங்க பொறுப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் பழனியப்பன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம் விரைவில் நடத்துவது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை ஒரு பணி விதியின் கீழ் மாற்றம் செய்யவேண்டும்.
பணி மாறுதல் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை அதே ஊராட்சியில் பணியில் அமர்த்த வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை முன்னுரிமை பட்டியலை வெளியிட வேண்டும். தகுதியானவர் களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட தணிக்கையாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story