பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து இந்து முன்னணி போராடும்


பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து இந்து முன்னணி போராடும்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 18 Jun 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.

தாமரைக்குளம்,

அரியலூர் பஸ் நிலையம் அருகே திருச்சி கோட்ட இந்து முன்னணி சார்பில் தமிழக பாதுகாப்பு மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

மாநாட்டில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள இந்துக்களுக்காக இந்து முன்னணி பரிந்து பேசும், வாதாடும். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்து முன்னணி அரசியலுக்கு போகாது. பிரிவினைவாத சக்திகள் நாட்டில் பல்வேறு வடிவங்களில் நடமாடி கொண்டிருக்கின்றன. அவை எந்த விதத்தில் வந்தாலும், அவற்றை இந்து முன்னணி எதிர்த்து போராடும். கரூர் மாவட்டம் ஓமாம் புலியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்க இந்து முன்னணி போராடும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வா.களத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாத செல்லியம்மன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில் புனிதத்தை காக்க வேண்டும். தமிழகத்தை உலகறிய செய்த ராஜேந்திர சோழன் வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார். மாநாட்டில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story