விளை பொருட்களை பாதுகாக்க நவீன குடோன்களை அரசு அமைத்து தரவேண்டும்


விளை பொருட்களை பாதுகாக்க நவீன குடோன்களை அரசு அமைத்து தரவேண்டும்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 18 Jun 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை பாதுகாக்க கொம்யூன் பஞ்சாயத்து வாரியாக நவீன குடோன்களை அரசு அமைக்கவேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் மங்கலட்சுமி நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கதிரொளி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் உமாசங்கர், பொருளாளர் ஜெயராமச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஆறுமுகம், வெங்கடேசன், மணிவண்ணன், பொன்னுசாமி, ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட தண்ணீரை முறையாக வழங்க வேண்டும்.

* புதுவையில் மாநிலம் தழுவிய விவசாய மாநாடு ஒன்றை அரசியல் சார்பற்ற விவசாய சங்கங்களுடன் இணைந்து அரசே முன்னின்று நடத்த வேண்டும். இதில் நவீன தொழில்முறை கண்காட்சிகள் ஏற்பாடு செய்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை அரசே நேரடியாக களத்துக்கு சென்று கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவைகளை பாதுகாக்க கொம்யூன் பஞ்சாயத்துகள் வாரியாக நவீன பாதுகாப்பு வசதியுடன் கூடிய குடோன்களை அரசு அமைக்கவேண்டும்.

* விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதை தடுக்க அரசால் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும். அதில் உறுப்பினர்களாக புதுவையை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story