கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடிக்கு 50 சதவீத நிதி வழங்க வேண்டும்
கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடிக்கு 50 சதவீத நிதி உதவி வழங்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு,
நிதி ஆயோக் சார்பில் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் புதிய அரசு மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தேவை. நாம் பல்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டு இருந்தாலும் வளர்ச்சி என்று வருகிறபோது நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினை குறித்து பேச நான் விரும்புகிறேன்.
கர்நாடகத்தில் விவசாயிகள் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எனது அரசு தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். கர்நாடகத்தில் 85 லட்சம் விவசாயிகள் பல்வேறு வங்கிகளில் இருந்து விவசாய கடன் பெற்றுள்ளனர். வறட்சி காரணமாக விவசாயிகள் பிரச்சினையில் உள்ளனர். விவசாய கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு 50 சதவீதம் நிதி உதவி அளிக்க வேண்டும்.
விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. கர்நாடக விவசாய சந்தை கொள்கை-2013 சட்டம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதிகளை மத்திய அரசு ஆய்வு செய்து, தனது திட்டத்திலும் சேர்த்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு ஒரு உறுதியான விலை கிடைக்கிறது.
மண் மாதிரியை கண்டறிவதில் ஒரு புதிய முறையை கர்நாடகம் அறிமுகம் செய்துள்ளது. இது ஜி.ஐ.எஸ்., ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதியை கொண்டது ஆகும். நாங்கள் மண் மாதிரியை சேகரிக்க ஒரு செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த விவரங்கள் நில ஆவணங்களில் இணையதள தொழில்நுட்ப வசதி மூலம் சேர்க்கப்படுகிறது.
கர்நாடக மாநில தகவல் மையத்தில் உள்ள இந்த மண் மாதிரி விவரங்கள், டெல்லியில் உள்ள என்.ஐ.சி. மண் சுகாதார மையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக இந்த திட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளோம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய பயிரிடும் முறையை ஏற்படுத்த நாங்கள் ஊக்கம் அளித்து வருகிறோம்.
வானிலை மாற்றம் என்பது உண்மையானது. இது விவசாயத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக ஒரு முழுமையான திட்டத்தை வகுக்க தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் காலநிலைக்கு உகந்த பயிர்களை பயிரிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தண்ணீர் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது. இது விவசாயம் மற்றும் வளர்ச்சியில் ஒரு வரையறுக்கத்தக்க காரணமாக அமையும். தண்ணீர் பிரச்சினையில் இருந்து வெளியே வர நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ‘கெரே சஞ்சீவினி‘ என்ற திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். நீர் வளத்தை பாதுகாக்க நாம் 10 ஆண்டுகள் காலத்தை அதற்காக ஒதுக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதை தண்ணீர் 10 ஆண்டுகள்(வாட்டர் டெக்கேட்) என்று கூட அழைக்கலாம்.
நமது நிதி ஆதாரத்தில் ஒரு பகுதியை தண்ணீரை பாதுகாக்க செலவிட வேண்டும். இதற்காக எங்கள் அரசு ஈடுபாட்டுடன் செயல்பட தயாராக உள்ளது. பிரதம மந்திரி ‘ராஷ்டிரிய ஸ்வஸ்த சுரக்ஷா மிஷன்‘ திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதுபோல் கர்நாடக அரசு யசஸ்வினி உள்பட பல்வேறு சுகாதார திட்டங்களை கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 1.45 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. இதில் 30 லட்சம் வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களும் உள்ளன.
இந்த 2 திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்திராதனுஷ் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பின்தங்கிய நிலையில் உள்ள யாதகிரி, ராய்ச்சூர் மாவட்டங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர நாங்கள் ஒரு முழுமையான திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களில் இடம் பெறாத ஒரு விஷயத்தை பற்றி பேசவும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இது மிக மிக முக்கியமானது. இது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றியது. பயனுள்ள முதலீடுகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு திறன் மேம்பாடும் முக்கியமானது. கர்நாடகத்தில் திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.
வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய விஷயங்களை இந்த அம்சத்தில் சேர்க்க வேண்டும். பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதற்காக மாநிலங்கள் அதிக நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த செலவு 6 மடங்காக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. 2015-2020 ஆண்டுகளுக்கு இயற்கை பேரிடர் நிதிக்கு கர்நாடகத்திற்கு ரூ.1,375 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை மிகவும் குறைவானது ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் ஆகும்.
எதிர்காலத்தில் பெரிய நகரங்கள் நாட்டின் வளர்ச்சி என்ஜினாக இருக்கலாம். ஒருவேளை அவ்வாறு இல்லாமலும் போகலாம். ஒரு நிலையான வளர்ச்சிக்கு பல நகரங்களை வளர்ச்சி அடைய செய்வது அவசியம் ஆகும். எனவே இந்த கூட்ட விவாத பொருளில் நகர வளர்ச்சி குறித்த அம்சத்தையும் சேர்க்க வேண்டும். நிதி ஆயோக் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசு ஆகியவை கூட்டாட்சி, உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் என்று நம்புகிறேன். நிதி ஆயோக் தனது அனுபவங்களை, சிறப்பாக செயல்படுத்துதலை, தேசிய அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துதலை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Related Tags :
Next Story