திருவள்ளூரில் நாளை நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் தேதி மாற்றம்


திருவள்ளூரில் நாளை நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் தேதி மாற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2018 1:42 AM IST (Updated: 19 Jun 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களின் கூட்டமைப்புகளுடன் ஆலோசனைக்குழு கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story