கொள்ளை சம்பவங்களை தடுப்பது குறித்து வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுப்பது எப்படி? என்று வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுப்பது எப்படி? மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், வங்கி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வங்கியில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக வங்கிக்குள் யாரேனும் இருந்தால் போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் பணம் எடுத்து செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏ.டி.எம்.மையங்களுக்கு காவலாளியை நியமிக்க வேண்டும். வங்கியில் பொருத்தப்படும் கேமராக்கள் வேலை செய்கிறதா? என்பதை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் எடுத்து கூறினார்கள்.
Related Tags :
Next Story