காஞ்சீபுரத்தில் குடோனில் பதுக்கிய 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்களை காஞ்சீபுரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து வந்தனர்.
இந்தநிலையில் காஞ்சீபுரம் ரெட்டிப்பேட்டை தெருவில் உள்ள ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனரும், தனி அதிகாரியுமான சர்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர், நகராட்சி சுகாதார துறை அதிகாரி டாக்டர் முத்து மற்றும் சுகாதாரத்துறையினருடன் நேற்று காலை காஞ்சீபுரம் ரெட்டிப்பேட்டை தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் ஆய்வு செய்தார்.
10 டன் பிளாஸ்டிக் பொருட்கள்
அப்போது அந்த குடோனில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் என 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சர்தார் கூறும்போது, “காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல், தட்டு, பைகள் உள்பட இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, உபயோகப்படுத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story