கிண்டி பாம்பு பண்ணையில் ஆசிய மலைப்பாம்பு 50 முட்டைகள் போட்டது
கிண்டி பாம்பு பண்ணையில் பாம்பு ஒன்று 50-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டு அடைகாத்து வருகிறது.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அரசு பாம்பு பண்ணையில், 16 அடி நீளமுள்ள தென்கிழக்கு ஆசிய மலைப்பாம்பு கண்ணாடி பேழைக்குள் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. 25 வயதாகும் இந்த பாம்பு தற்போது 50-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டு அடைகாத்து வருகிறது.
இதுதொடர்பாக கிண்டி பாம்பு பண்ணையில் பணி புரியும் சுற்றுச்சூழல் கல்வி அலுவலர் கண்ணன் கூறும்போது, ‘மலைப்பாம்பு இட்டுள்ள முட்டைகளில் இருந்து 63 நாட்களுக்கு பிறகு குட்டிகள் வெளியே வரும். பின்னர் அந்த குட்டிகள் தனித்தனியாக பிரித்து வளர்க்கப்படும். தென்கிழக்கு ஆசிய மலைப்பாம்புகள் நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகளில் அதிகம் உள்ளது. இந்த பாம்புகள் குறைந்தபட்சம் 50 முதல் அதிகபட்சம் 124 முட்டைகள் வரை போடும்.’ என்றார்.
மலைப்பாம்பை பராமரித்து வரும் மணி என்பவர் கூறுகையில் ‘முட்டைகள் போட்டதில் இருந்து மலைப்பாம்பு எந்த உணவையும் சாப்பிடுவது இல்லை.
முட்டைகளை சுற்றியவாறு, சுருண்டு படுத்துக்கிடக்கிறது. அந்த இடத்தை விட்டு நகருவது இல்லை. அருகே சென்றால் ஆக்ரோஷம் காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story