ஊதிய உயர்வு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: 80 பேர் கைது
ஊதிய உயர்வு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
ஊராட்சியில் பணிபுரியும் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வும், சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிமுடித்த தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில துணை செயலாளர் வீராசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாநிலத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story