கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 144 பேர் தற்செயல் விடுப்பு


கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 144 பேர் தற்செயல் விடுப்பு
x
தினத்தந்தி 20 Jun 2018 3:45 AM IST (Updated: 20 Jun 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தேனி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி தேனி மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 374 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 144 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story