ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்துகளில் 4 பேர் படுகாயம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்துகளில் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:00 AM IST (Updated: 20 Jun 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்துகளில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நெல்லை மாவட்டம், குற்றாலத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் வினோத் (24). சென்னையில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இவர் தனது நண்பரான ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். மடவார்வளாகம் அருகே ஒரு வளைவில் வரும்போது, நிலைதடுமாறி சாலை ஓரம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த அர்ஜூனன், பின்னால் அமர்ந்து வந்த வினோத் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்த குருநாதன் (38), வத்திராயிருப்பைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கோட்டையூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், குருநாதன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் குருநாதன், ஜெகதீஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


Next Story