ஜெயலலிதா ஆன்மா இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது
ஜெயலலிதா ஆன்மா இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் பென்னாகரம் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், முன்னாள் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பாபு, நிர்வாகிகள் தவுலத்பாஷா, குலாம்முஸ்தபா, மீராவஜ்ஜிரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், ஜெ.பேரவை முன்னாள் மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், தலைமைக்கழக பேச்சாளர் கடலூர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி அ.தி.மு.க. அரசு வெற்றிபெற்றது குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் பெரிய திட்டங்களை செயல்படுத்தும் திராணி தி.மு.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் பெரிய திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சி ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி.டி.வி.தினகரன் தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், சிவப்பிரகாசம், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, மாதையன், முன்னாள் கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் செங்கோடன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைசெயலாளர் ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story