போராட்டத்தை தூண்டியதாக கல்லூரி மாணவி வளர்மதி கைது
சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்ட நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களிடம் போராட்டத்தை தூண்டியதாக கல்லூரி மாணவி வளர்மதியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 22). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெயில் மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்.
இதனால் சேலம் போலீசார் மாணவி வளர்மதியை மாவோயிஸ்டு ஆதரவாளர் எனக்கூறி கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம்-சென்னை பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி வளர்மதி, ஆச்சாங்குட்டப்பட்டிக்கு வந்தார். அங்கு திட்டத்திற்கு நில அளவீடு பணி நடக்கும் இடத்திற்கு வந்த அவர் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசினார். அவர் பேசும்போது, ‘8 வழிச்சாலை திட்டம் நமக்கு தேவையில்லை என நாம் கூறுகிறோம். பசுமை சாலைக்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். வாய் திறந்து பேசினாலே கைது என்ற நிலையை ஏற்படுத்தி பயமுறுத்துகின்றனர்’ என்று கூறினார்.
அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அங்கு வந்த போலீசார், ‘உங்களுக்கு இங்கு நிலம் உள்ளதா? தேவையில்லாமல் ஏன் போராட்டத்தை தூண்டுகிறீர்கள்?’ எனக்கேட்டனர். அதற்கு அவர், ‘பொதுமக்கள் என்னை அழைத்தார்கள், அதனால் வந்தேன்’ என்று கூறினார். அப்போது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர் அங்கிருந்த பொதுமக்களை பிடித்து கொண்டார். போலீசார் ஒரு பக்கம் இழுக்கவும், பொதுமக்கள் ஒரு பக்கம் அவரை இழுக்கவும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண் போலீசார் அவரை கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அவர் அரசுக்கு எதிராக கோஷமிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு நில அளவீடு பணி தொடர்ந்து நடந்தது. கல்லூரி மாணவி கைது சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story