குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை: சிற்றார்-2 அணைப்பகுதியில் 31 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ந்து வரும் நிலையில் சிற்றார்-2 அணைப்பகுதியில் 31 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இடையில் ஒன்றிரண்டு நாட்கள் மழை ஓய்ந்திருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டப்பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 11.4, பெருஞ்சாணி- 13.8, சிற்றார் 1- 9.8, சிற்றார் 2- 31, மாம்பழத்துறையாறு- 5, புத்தன் அணை- 12, பூதப்பாண்டி- 3.8, களியல்-6.2, கன்னிமார்- 7.2, குழித்துறை- 3.6, சுருளக்கோடு- 10, தக்கலை- 2.4, குளச்சல்- 8.4, பாலமோர்- 24.2, ஆரல்வாய்மொழி- 2, கோழிப்போர்விளை- 7, அடையாமடை- 3, முள்ளங்கினாவிளை- 4 என்ற அளவில் பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 690 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 775 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 327 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 120 கன அடி தண்ணீர்திறந்து விடப்படுகிறது.
மாம்பழத்துறையாறு அணைக்கு 5 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story