முன்விரோதம் காரணமாக மோதல்; 7 பேர் மீது வழக்கு


முன்விரோதம் காரணமாக மோதல்; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jun 2018 3:45 AM IST (Updated: 20 Jun 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த திருமணம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமணம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 65). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் இடையே வீட்டு மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

நேற்று முன்தினம் அம்பிகா வீட்டில் இருந்த போது அங்கு வந்த மாரியப்பன் அவரது உறவினர்களான முருகவேல், கோமதி ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அம்பிகாவை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பதிலுக்கு அம்பிகா தனது உறவினர்களான ராஜேந்திரன், பவித்ரன், பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து மாரியப்பன் தரப்பினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story