மாநகராட்சி வளாகத்தில் தியான குடில்கள் மாநகராட்சி கமி‌ஷனர் திறந்து வைத்தார்


மாநகராட்சி வளாகத்தில் தியான குடில்கள் மாநகராட்சி கமி‌ஷனர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Jun 2018 3:15 AM IST (Updated: 21 Jun 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

உலக தியான தினத்தை முன்னிட்டு மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான குடில்களை கமி‌ஷனர் அனீஷ்சேகர் திறந்து வைத்தார்.

மதுரை,

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் மாநகராட்சி அண்ணா மாளிகையில் தியான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் நேற்று திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

யோகா என்பது உடற்பயிற்சி அல்ல, மன பயிற்சி ஆகும். மனிதனின் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் மனநிலை நன்றாக இருக்கும். யோகா நமது வாழ்க்கை முறையில் முக்கியமான மனக்கட்டுப்பாட்டை தரக்கூடியது ஆகும். மனிதனுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே இருப்பது போன்று ஒவ்வொருடைய மன அழுத்தமும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்க்கையில் போராட வேண்டி உள்ளது. இதனால் ஒவ்வொருடைய மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

எனவே மனநலத்தை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகிறது. எனவே வாழ்க்கையில் சந்தோ‌ஷமாக வாழ நமது மன அழுத்தத்தை குறைக்க இந்த யோகா பயிற்சி முக்கியமான ஒன்றாகும். நமது மனம் புத்துணர்ச்சி பெறுவது நாம் நினைத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது. எனவே அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மனநலத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தியான குடிலில் யோக தொடர்ந்து 3 நாட்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். அதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.


Next Story