சுத்தமல்லியில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பு காணொலி காட்சி மூலம் முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
சுத்தமல்லியில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பை நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை,
சுத்தமல்லியில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பை நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காவலர் குடியிருப்புநெல்லையை அடுத்த சுத்தமல்லியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்–இன்ஸ்பெக்டர்கள் 66 காவலர்கள் என மொத்தம் 73 புதிய காவலர்களுக்கான குடியிருப்புகள் ரூ.9 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து நேற்று திறந்து வைத்தார்.
பங்கேற்றவர்கள்இதற்கான விழா நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்யானந்த், வசந்திமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், சேரன்மாதேவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக செயற்பொறியாளர் ரவிசந்தர், உதவி செயற்பொறியாளர்கள் ஜெய்சங்கர், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.