மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.
மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்றத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்மதிகெட்டான் அணையை சீரமைத்து மானூர், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் விட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. அந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொருளாளர் கல்யாண சுந்தரம், மாநில செயலாளர் அய்யாத்துரை, நெல்லை மண்டல செயலாளர் கமலவேல் செல்வமணி, நெல்லை மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் சித்தார்த் வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.