வீடு வாங்கியவர் பணம் தராததால் கட்டிட ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணா


வீடு வாங்கியவர் பணம் தராததால் கட்டிட ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 21 Jun 2018 3:15 AM IST (Updated: 21 Jun 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே வீடு வாங்கியவர் பணம் தராததால் கட்டிட ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கட்டிடம் கட்டித்தரும் ஒப்பந்ததாரர் பாபு என்ற பதுருதீன்(வயது 50). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் விஜயகுமார் என்பவரது மனைவி ஜெயச்சந்திரலலிதாவுக்கு தனது இடத்தை விற்பனை செய்துள்ளார். மேலும் அந்த இடத்தில் புதிய வீடு கட்டித்தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தத்தின்படி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டின் வேலைகளை முடித்து கொடுத்த நிலையில் ஒப்பந்தத்தின்படி பணத்தை தராமல் ஜெயச்சந்திரலலிதா காலம் கடத்துவதாக கூறி அவரது வீட்டின் முன் தனது குடும்பத்துடன் பதுருதீன் பந்தல் அமைத்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story