பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கைவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கைவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2018 4:30 AM IST (Updated: 21 Jun 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கைவிடக்கோரி காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வினை உடனே கைவிடக்கோரி காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் புதிய பஸ்நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிச்சையன், கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, கியாஸ் சிலிண்டருக்கு மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக தினந்தோறும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. இதனால் அனைத்து பொருட்களின் விலைகள் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Next Story