வரி ஏய்ப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ‘சம்மன்’ பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு அனுப்பியது


வரி ஏய்ப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ‘சம்மன்’ பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு அனுப்பியது
x
தினத்தந்தி 21 Jun 2018 3:45 AM IST (Updated: 21 Jun 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு ‘சம்மன்‘ அனுப்பி உள்ளது.

பெங்களூரு, 

வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு ‘சம்மன்‘ அனுப்பி உள்ளது.

வருமான வரி சோதனை

கர்நாடக நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு கடந்த ஆண்டு(2017) நடந்த தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு கட்சி தாவாமல் தடுக்கும் வகையில் அம்மாநில எம்.எல்.ஏ.க்களை டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து பாதுகாத்தார்.

இந்த வேளையில், டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை டெல்லி, பெங்களூரு, ராமநகர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.8.50 கோடி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் வருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்ததாக டி.கே.சிவக்குமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்தது.

டி.கே.சிவக்குமாருக்கு ‘சம்மன்‘

இந்த நிலையில், ரூ.8.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டதற்கான 2018–19–ம் ஆண்டு வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் 4–வது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி எம்.எஸ். ஆல்வா, மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி 4–வது ‘சம்மன்‘ அனுப்பினார்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு 4–வது ‘சம்மன்‘ அனுப்பப்பட்டுள்ளது‘ என்றார்.


Next Story