நான் எந்த தவறும் செய்யவில்லை; எதற்கும் பயப்படமாட்டேன் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


நான் எந்த தவறும் செய்யவில்லை; எதற்கும் பயப்படமாட்டேன் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2018 3:00 AM IST (Updated: 21 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக வந்த நோட்டீசை தொடர்ந்து நான் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக வந்த நோட்டீசை தொடர்ந்து நான் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதுபற்றி அவர் பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

பொறுமையாக இருப்பேன்

நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எதற்கும் பயப்படமாட்டேன். திட்டமிட்டே அடிக்கடி என்னையும், எனது குடும்பத்தினர், உறவினர்களையும் இலக்காக வைத்து செயல்படுகிறார்கள். நியாயமான முறையில் நான் நடந்து வருகிறேன். என்னிடமும் பல்வேறு டைரிகள் மற்றும் பெயர்கள் உள்ளன.

நான் கடைசி வரை பொறுமையாக இருப்பேன். நேரம் வரும்போது, அந்த தகவல்களை வெளியிடுவேன். எனக்கு கோர்ட்டில் இருந்து எந்த சம்மனும் வரவில்லை. நோட்டீஸ் தான் வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜராவேன். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எந்த வகையில் நெருக்கடி உள்ளதோ தெரியவில்லை. நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் பதில் சொல்வேன்.

பயப்படமாட்டேன்

இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எல்லா குற்றச்சாட்டுக்கும் கோர்ட்டிலேயே பதில் சொல்வேன். இதுவரை சட்டத்தை மதித்து நடந்து வந்துள்ளோம். இனிமேலும் சட்டப்படியே நாங்கள் நடந்து கொள்வோம். என்னை இலக்காக கொண்டு மிரட்ட முயற்சி செய்தால், நான் பயப்படமாட்டேன்.

வருமான வரி வி‌ஷயத்தில் எனக்கு மட்டுமின்றி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் தொல்லை கொடுக்கிறார்கள். இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது எனக்கு தெரியும். அதை விரைவில் பகிரங்கப்படுத்துவேன். அவரவர் இஷ்டம்போல் என் மீது குற்றம்சாட்டுகிறார்கள். நாட்டில் சட்டம் உள்ளது. அதன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story