வங்கி பெண் அதிகாரியின் ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட முன்னாள் காதலன் பிடிபட்டார்


வங்கி பெண் அதிகாரியின் ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட முன்னாள் காதலன் பிடிபட்டார்
x
தினத்தந்தி 21 Jun 2018 4:00 AM IST (Updated: 21 Jun 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

வங்கி பெண் அதிகாரியின் ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

வங்கி பெண் அதிகாரியின் ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

வங்கி பெண் மேலாளர்

மும்பை செம்பூரை சேர்ந்த 26 வயது பெண் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கும், செம்பூர் வந்திருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஸ்டூவார்ட் குகா (வயது31) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி னர். நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து ஸ்டூவார்ட் குகா, காதலியை லோனவாலா, அலிபாக் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை ஆபாசமாக படம் பிடித்து வைத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

முன்னாள் காதலன் கைது

இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் அவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களது காதல் முறிந்தது. கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த ஸ்டூவார்ட் குகா, அண்மையில் அந்த பெண்ணின் ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி பெண் அதிகாரி இது குறித்து செம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மேற்கு வங்காளம் சென்ற போலீசார் துர்காபாடா பகுதியில் பதுங்கியிருந்த ஸ்டூவார்ட் குகாவை கைது செய்து, மும்பை அழைத்து வந்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story