கல்வியில் யோகா! வாழ்வினில் யோகம்!
இன்று (ஜூன் 21-ந்தேதி) சர்வதேச யோகா தினம்.
யோகா என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஆன்மிக அறிவியலாகும். நமது உணர்வு, உடல், மனது ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அருமையான கலையாகவும் யோகா அமைந்துள்ளது. ஆத்மாவின் சக்தியை யோகா ஊக்கப்படுத்துகிறது. அனைவருமே வைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம் இது.
இந்திய தத்துவத்தில் இடம்பெற்றுள்ள ஆறு தரிசனங்களில் யோகா தரிசனமும் ஒன்று. பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் யோகாவை வலியுறுத்துகிறது. உடலளவிலும், மனதளவிலும் வேண்டியதையும் வேண்டாததையும் பிரித்து நல்வாழ்வு வாழ்வதற்கு யோகா உதவுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நமது ரிஷிகளால் நமக்கு தரப்பட்டுள்ள இந்த புனிதமான அறிவை, உலக நாடுகளுக்கு இந்தியர்கள் கொண்டு செல்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள், உடல் பருமன் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை அவர்களிடம் இல்லை. கடுமையான அழுத்தங்கள் காரணமாக அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
வாழ்நாள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், எளிய வழியில் நிவாரணம் பெறவும் நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அதுதான் யோகா அறிவியலாகும். அதில் பல கட்டங்கள் உள்ளன. 64 வாழ்வியல் கலைகளில் யோகாவும் ஒன்று. யோகாவில் ஈடுபட்ட பலர் தங்களின் களங்களில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் இருந்த யோகா அறிவியலை, சரியான நேரத்தில் உலகளவில் அறியச் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஐக்கிய நாடுகள் சபையில் யோகா பற்றி அவர் பேசிய பேச்சுதான், சர்வதேச அளவில் யோகா தினத்தை கொண்டாட அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தற்போது அகில உலகமும் இந்த ஆரோக்கிய பாதையை பின்பற்றத் தொடங்கிவிட்டது. யோகா பயிற்சியை இந்திய இளைஞர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களுக்குள் உணர்ச்சி, மனம், அறிவு, கவுரவம் ஆகிய குணாதிசயங்களை கொண்டுள்ளனர். மனம் அமைதியை நாடும்போது, உணர்ச்சி அதை உடைக்கிறது. மனதை அது ஆக்கிரமித்துக் கொண்டு வெவ்வேறு வழிகளைக் காட்டுகிறது. உணர்ச்சியை கட்டுப்படுத்தும்போது மனது தானாகவே அமைதிக்குச் சென்றுவிடுகிறது. அந்த வகையின் மனதை கட்டுப்படுத்திவிட முடியும் என்று யோகா நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்த தத்துவம் தெரியாததால்தான் தேவையற்ற அழுத்தங்களையும், தொல்லைகளையும் சந்திக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். உணவு, பேச்சு, பணி, மனது, உடல் ஆகிய அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவதோடு, நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செயல்படுவதற்கு யோகா உதவுகிறது.
யோகாவின் பல்வேறு நிலைகளை நம் நாட்டு ரிஷிகள் விளக்கியுள்ளனர். அதில் மிகப்பெரிய நிலை ஆசனம் என்ற பயிற்சியாகும். நல்ல ஆரோக்கியத்துக்காக அதை யாரும் பயிற்சி செய்யலாம். உடல் எடை குறைப்பு, தேவையற்ற கொழுப்பு குறைப்பு, கோபத்தை கட்டுப்படுத்துவது, செரிமான சக்தியை அதிகரிப்பது, தூக்கமின்மையை தவிர்த்தல், கவனமான செயல்பாடு போன்றவற்றுக்கு ஆசன பயிற்சி உதவுகிறது.
பழைய காலங்களில் இளம் வயதில் இருந்தே மக்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். வெளிநாட்டவர்களிடம் பல நூற்றாண்டு காலமாக போராடி சுதந்திரத்தை பெற்ற நாம், நமது சுய மரியாதையை இழந்து யோகா என்ற விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை புதைத்துவிட்டோம். தற்போது மக்கள் பலர் அந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்து, தங்கள் உடல் நலத்தை பேணுவதற்காக யோகா பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
லத்தீன் அமெரிக்கா நாட்டுக்கு நான் சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது, அங்கு பல இடங்களில் சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக யோகா பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியமும் பெருமையும் அடைந்தேன். பல நாட்டு தலைநகரங்களில் யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் கலைச் செல்வத்தை உலக நாடுகள் அனைத்துமே ஏற்றுக்கொண்டிருப்பது, நம்மையெல்லாம் பூரிக்கச் செய்கிறது.
இந்த ஆன்மிக பூமியில் பிறந்த சிலரே, யோகா பற்றி விமர்சனம் செய்வது உண்மையில் வருத்தமளிப்பதாக உள்ளது. யோகா என்பது மத நம்பிக்கைக்கான முறையல்ல. யோகாவுடன் மதத்தை இணைப்பது அர்த்தமற்றது. மத நம்பிக்கைகளுக்கு குறுக்கே யோகா பயிற்சி வருவதில்லை. உண்மையிலேயே யோகா என்பது, ஆரோக்கியத்துக்கான அறிவியல். யோகா கல்வியால் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும்.
மதத்தின் அடிப்படையில் நோயாளிகளை வித்தியாசப்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பதில்லை. அதுபோலத்தான் யோகாவும் மதரீதியாக மக்களைப் பிரிப்பதில்லை. வகுப்புவாத கோணத்தில் யோகாவைப் பார்ப்பது தவறு. எனவே அனைத்து நம்பிக்கைகளுக்கும் உரியதாக யோகா அறிவியல் ஏற்கப்பட வேண்டும்.
சமுதாயத்தின் அனைத்து காலகட்டத்துக்கும் யோகா ஏற்றது; பயிற்சிக்கு செலவும் கிடையாது. ஒவ்வொருவரின் தினசரி அங்கமாக யோகா பயிற்சி ஆக வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளின் பாடத்திட்டத்திலும், என்.சி.சி. பயிற்சியிலும் யோகா இணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் யோகாவுக்கென்று தனி வகுப்பு நடத்தப்பட வேண்டும்.
இந்த பழங்கால கலையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு ஆன்மிக குருக்களான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் ஆகியோர் முயற்சிகளை எடுத்து, உலக அளவில் அதுபற்றி பிரசாரம் செய்வது மனதை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. வாழும் கலை, பதஞ்சலி பீடம் போன்ற ஆன்மிக நிறுவனங்கள், யோகாவை பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.
நாட்டுக்காக மட்டுமல்லாமல், புற்றுநோய், இருதய நோய், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்காகவும் அனைவருமே தினமும் யோகாவை பயிற்சி செய்வது அவசியமாகும்.
எக்கு போன்ற நரம்புகளும், இரும்பு போன்ற உடலும், இடிகளைப் போன்ற மன உறுதியையும் கொண்ட இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அப்படிப்பட்ட ஒருவரை யோகா உருவாக்குகிறது.
- எம்.வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

Related Tags :
Next Story