திருமணம் நிறுத்தப்பட்ட சிறுமி, கல்வி தொடர கலெக்டர் நடவடிக்கை
திருமணம் நிறுத்தப்பட்ட சிறுமி, கல்வி தொடர திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த திருமணம் நடைபெற இருந்தது. இதை அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட நீதிபதி கலைமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வி தொடர நடவடிக்கை
அப்போது அந்த சிறுமிக்கு உரிய ஆலோசனை வழங்கிய கலெக்டர் நிர்மல்ராஜ் கல்வி உபகரணங்களை வழங்கி, அந்த சிறுமி, கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தார். இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் உமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story