சர்வதேச யோகா தினம்: விழுப்புரத்தில் மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்த கலெக்டர்


சர்வதேச யோகா தினம்: விழுப்புரத்தில் மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 22 Jun 2018 5:00 AM IST (Updated: 22 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தையொட்டி விழுப்புரத்தில் மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் யோகா பயிற்சி செய்தார்.

விழுப்புரம், 

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் மத்திய யோகா, இயற்கை வைத்திய ஆராய்ச்சி கழகம், ஈஷா யோகா மையம், பதஞ்சலி யோகா பீடம், விழுப்புரம் மாவட்ட யோகாசன சங்கம், நேரு யுவகேந்திரா, சுவாமி விவேகானந்தர் தேசிய பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து இருவரும் யோகாபயிற்சியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு வகையான யோகாசனங்களை நின்ற நிலை, அமர்ந்த நிலை, படுத்த நிலையில் செய்து அசத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், மாவட்ட யோகாசன சங்க தலைவர் ராமமூர்த்தி, பதஞ்சலி யோகா பீட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத், ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தமூர்த்தி, யோகா தின விழாக்குழு நிர்வாகிகள் செந்தில், ஆரோக்கியசாமி, வெங்கடேசன், கிருபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி பிரதீப், யோகா ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்துகொண்டு யோகாபயிற்சியில் ஈடுபட்டனர்.

Next Story