சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்: பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
மேலமாத்தூரில் நடந்த சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி வழங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரியின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மேலமாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பேசிய தாவது:-
நலத்திட்ட உதவிகள்
தமிழக அரசு கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு வகையான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கும், இத்திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதற்கும் இது போன்ற மக்கள் தொடர்பு முகாம்களை பொது மக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தங்கள் கிராமத்திற்கு வருகை தந்துள்ள அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறியதை மனதில் நிறுத்தி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், பண்ணை குட்டை அமைக்கவும், மண்புழு உரக்குழி அமைத்தல் போன்ற நலத்திட்ட உதவிகள் 70 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்கள் உள்பட மொத்தம் 154 பேருக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி வழங்கினார்.
அதிகாரிகள்
முகாமில் தனித்துணை கலெக்டர் மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாண்டியன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, வட்டாட்சியர்கள் சீனிவாசன், ஷாஜஹான் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story