பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

அரியலூர்,

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், யோகாசன பயிற்சி பெரம்பலூர் மாவட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தா பங்கேற்று யோகாசனங்களை செய்தார். இந்த யோகா பயிற்சியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களையும், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சாந்தா நிருபர்களிடம் கூறுகையில், நமது உடலை ஆரோக்கியமானதாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அனைவரும் யோகா பயிற்சியினை தினமும் செய்ய வேண்டும். யோகா செய்வதன் மூலம் மனம் தெளிவு பெறும். மனதும், உடலும் வலிமை மிக்கதாக உருவாகும். குழந்தைகளுக்கும் சிறு வயதி லிருந்தே யோகப்பயிற்சிகளை தவறாது செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாரதிதாசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்ரமணியராஜா, யோகா ஆசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மருவத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கி யோகா பயிற்சிகளின் பயன்கள் குறித்து பேசினார். தொடர்ந்து உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு வலிமையையும் தருவதுடன், நினைவாற்றலை அதிகரிக்கும் யோகப்பயிற்சிகளை மாணவர்கள் அனை வரும் செய்தனர். கண்பயிற்சி, கை பயிற்சி, கால்பயிற்சி, மூச்சு பயிற்சி மற்றும் பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களையும் மாணவர்கள் செய்தனர்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டமன்றத்தில் அலுவலக பணியாளர்களுக்கு நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன் பல்வேறு ஆசனங்களை செயல்விளக்க தோடு எடுத்து கூறி யோகா பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்கோதை, சந்தானம், அலுவலக மேலாளர் ராஜ மாணிக்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்குமார், இளங்கோவன் உள்பட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதேபோல் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சியில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் அரியலூர் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கி பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) குருநாதன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைவருக்கும் யோகா பயிற்சியினை யோகா பயிற்றுனர் தம்மச்சுடர் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை சமுதாய ஒருங்கிணைப்பாளர் சூர்யா, சமுதாய வளர் பயிற்றுனர் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story