தந்தை-மகனை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
அரியலூர் மாவட்டம், அந்தோணி ஜோசப் (வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் தர்மராஜ் (33) என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் (வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் தர்மராஜ் (33) என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்தோணிஜோசப் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வின்சென்ட் தர்மராஜ், அந்தோணிஜோசப்பை தகாத வார்த்தைகளால் திட்டி அருகே கிடந்த இரும்பு குழாயை எடுத்து தாக்கினார். இதனை தட்டி கேட்ட அந்தோணிஜோசப் மகன் அமல்ஜோஸ்பினையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அந்தோணி ஜோசப் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story