புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் யோகா செய்தனர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் யோகா செய்தனர்.
புதுக்கோட்டை,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகா செய்தார். இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி வாஞ்சிநாதன், மாவட்ட யோகா சங்க தலைவர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
இதேபோல் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பெட்லாராணி தலைமை தாங்கினார். யோகா பயிற்சியாளர்கள் முகமது தையூப், முகமது தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா செய்து காட்டினார்கள். தொடர்ந்து மாணவிகள் யோகா செய்தனர். இதில் மத்திய கலை பண்பாட்டு பயிற்சி வளமைய மாவட்ட கருத்தாளர் ரெங்கராஜூ உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே பாலநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சுவாதி தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தனர். பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
திருவரங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையில் திரளான மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். இதில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். வல்லத்திராக்கோட்டை, மாஞ்சான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அன்னவாசல் ஒன்றியம் மேலூரில் நடைபெற்ற யோகா தின விழாவிற்கு ஆசிரியர் பயிற்றுனர் முஜம்மில்கான் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மதியநல்லூர், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, இருந்திரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னமராவதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி ஒன்றியம் நாயக்கர்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கல்யாணி தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக யோகா செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story