திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது
திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-.இன்ஸ்பெக்டர் வரதராசன் தலைமையிலான போலீசார் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்து 2 பேர் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபடடது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அவர்கள், தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 40), சிந்தலக்குப்பத்தை சேர்ந்த சிவா (32) என்பது தெரியவந்தது. சுப்பிரமணியிடம் இருந்து 36 மதுபாட்டில்களையும், சிவாவிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏடூர் கிராமத்தில்
அதே போல கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு(25) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும், புதுவாயல் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட காரனோடையை சேர்ந்த அழகு(63) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story