கல்பாக்கம் அருகே மணல் கடத்தல்; 3 பேர் கைது


கல்பாக்கம் அருகே மணல் கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2018 1:55 AM IST (Updated: 22 Jun 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு பகுதியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம், 

கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சகாய நகர் பகுதி கிளியாற்று பாலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வீராண குன்னம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 45), ராஜீ (36) மற்றும் தனசேகர் (40) ஆகியோரை கைது செய்தனர். 

Next Story