கருக்காத்தம்மனுக்கு கடல்நீரால் அபிஷேகம் செய்த பெண்கள்


கருக்காத்தம்மனுக்கு கடல்நீரால் அபிஷேகம் செய்த பெண்கள்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் உள்ள கருக்காத்தம்மனுக்கு கடல்நீரால் பெண்கள் அபிஷேகம் செய்தனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் உள்ள கருக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததையொட்டி விழா நடந்தது. விரதம் இருந்த 108 பெண்கள்குடத்தில் கடல் நீரை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தனர். சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார். கும்பாபிஷேக 2-ம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.வி.எஸ்.சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். 

Next Story