விருதுநகரில் உள்ள பள்ளிகளில் யோகா தின விழா
விருதுநகர் நோபிள் மெட்ரிக். பள்ளியில் துணை முதல்வர் உதயகுமாரி முன்னிலையில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகர்,
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு யோகா சங்க அமைப்பின் நிறுவனர் மற்றும் செயலர் அரவிந்த் மற்றும் சாரண, சாரணிய இயக்க மாவட்ட ஆணையாளர் முத்துசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் கனகராஜ் விருந்தினரை வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் பேசுகையில், யோகாவினால் மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும் வளரும் என்று கூறினார்.
விழாவில் மாணவ, மாணவிகள் சிறுவர்களின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து யோகா மூலம் செய்து காண்பித்தனர். தேசிய மாணவ படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாண்டியராஜன் முன்னிலையில் தேசிய மாணவ படை மாணவிகள் யோகா செய்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் திட்ட அலுவலர் ஆசிரியர் வேல்முருகன் மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆசிரியர் ரவிக்குமார் முன்னிலையில் யோகா செய்தனர். விழாவில் பூர்ணிமா நன்றி கூறினார்.
விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த சர்வதேச யோகா தின விழாவை கல்லூரி துணை முதல்வர் ஜெகதீசன் தொடங்கி வைத்தார். யோகா பயிற்சியாளர்கள் சீனிவாசன், சாந்தி ஆகியோர் யோகாவை பற்றி கூறினர். மாணவ-மாணவிகள் சூரிய நமஸ்காரத்தின் 12 நிலை ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்தனர். விழா ஏற்பாடுகளை சேர்மன் சண்முகமூர்த்தி உத்தரவின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் ராஜரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது தலைமையாசிரியர் சந்திரமோகன் தலைமையில் என்.சி.சி. மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். யோகா பயிற்றுனர் பொன்ராஜ் பயிற்சி அளித்தார். இதில் உதவி தலைமை ஆசிரியர் குமரன், என்.சி.சி. அதிகாரிகள் வைரமணி பாண்டியன், பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா என்.சி.சி. அதிகாரி கர்னல் ராகுல் ஸ்ரீவட்வா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, யோகா பயிற்சி ஆசிரியர் நாகராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 18 வகையான யோகாசனங்களை செய்தனர்.
என்.ஏ.அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச்செயலர் அழகராஜா தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் ஆகியோர் யோகாசனங்களை பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் எடுத்து கூறினர்.
சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் சார்பில் கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படையின் திட்ட அலுவலர் பானுமதி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகளை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் 100 மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தெரசிட்டாமேரிசாந்தி, பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், வீரசரவணக்குமார், உடற்கல்வி இயக்குனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
சிவகாசி காளஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற யோகாவில் யோகா பயிற்றுனர் நாகஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சிகளை வழங்கினார். முன்னதாக பேராசிரியர் பிருந்தா வரவேற்று பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜேஸ்மின்பாஸ்டினா நன்றி கூறினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி சபையர் பள்ளியில் பள்ளியின் முதல்வர் பிரபு தலைமை தாங்கினார். யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் யோகா பயிற்றுனர்கள் அருண்குமார், குருநாதன், சாந்தி, சந்திரன், பாலசுப்பிரமணியன், லதா, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிழ்ச்சியில் வட்டாார வளர்ச்சி அலுவலர்கள் முனியசாமி, ரவி, செயலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story