சேலத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்


சேலத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளியில் கடந்த 16-ந்தேதி முதல் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

சேலம்,

சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளியில் கடந்த 16-ந்தேதி முதல் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வந்து இருந்தனர்.

காலை 10 மணி அளவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான இடமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அலுவலர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் பலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மாவட்டம் விட்டு, மாவட்டத்திற்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்று இரவோடு, இரவாக அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இது எங்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.என்று கூறினர்.

இந்த தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story