பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்க்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் தேவேகவுடா பேட்டி


பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்க்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:30 AM IST (Updated: 22 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்க்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்க்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் என்று தேவேகவுடா கூறினார்.

தேவேகவுடா யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று பெங்களூரு பத்மநாபநகரில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் பல்வேறு வகையான யோகா பயிற்சியை செய்தார். 86 வயதிலும் அவர் உற்சாகமாக இந்த பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்து தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:–

யோகா பயிற்சி குறித்த வி‌ஷயங்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும். பெங்களூருவில் இந்த யோகா பயிற்சி மேற்கொள்ள சில பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. புதிய பள்ளிகளை தொடங்கும்போது, கட்டாயம் விளையாட்டு மைதானம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரணம் கிடைக்க வாய்ப்புகள்

மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரும் யோகா பயிற்சியில் சிறந்து விளங்கினர். இந்த யோகா பயிற்சி மூலம் புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நான் 23–வது வயதில் ஒப்பந்ததாரராக பணி செய்தேன். அப்போது தினமும் 80 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் சுற்றுவேன். இதைவிட ஒரு உடற்பயிற்சி இருக்கிறதா?.

நான் தொடக்கத்தில் இருந்தே உழைத்து வந்தேன். நான் உணவுகளை மிதமாக எடுத்துக் கொள்வதே எனது உடல் நலத்தின் ரகசியம். பிரதமர் மோடி மூலம் யோகா சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யோகா பயிற்சிக்கு மோடி புதிய வடிவத்தை கொடுத்தார்.

சவால் விடுக்கவில்லை

ஆதிகாலம் முதலே முனிவர்கள் யோகா பயிற்சி செய்து தங்களின் உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டனர். இதனால் அத்தகைய முனிவர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தனர். இப்போதும் இதுபோன்ற மகா முனிவர்கள் இமயமலையில் வசிக்கிறார்கள். நான் யாருக்கும் யோகா பயிற்சி மூலம் சவால் விடுக்கவில்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story