வருகிற 30–ந் தேதி வரை நடக்கிறது பட்ஜெட் தயாரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் குமாரசாமி தொடங்கினார்
பட்ஜெட் தயாரிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை குமாரசாமி தொடங்கினார்.
பெங்களூரு,
பட்ஜெட் தயாரிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை குமாரசாமி தொடங்கினார். முதல் நாளில் நீர்ப்பாசனம் உள்பட பல்வேறு துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தினார்.
பட்ஜெட் தயாரிப்புகர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டார். ஜூலை மாதம் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குமாரசாமி ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 22–ந் தேதி(நேற்று) முதல் தொடங்கி நடத்தப்படும் என்று குமாரசாமி அறிவித்தார். அதன்படி பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் கர்நாடக மின்சார உற்பத்தி கழக அலுவலகத்தில் உள்ள சக்தி பவனில் நேற்று தொடங்கி நடைபெற்றது.
முதல் நாளில் நீர்ப்பாசனம், மருத்துவ கல்வித்துறை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதில் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அந்த துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே போல் தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை, வருவாய்த்துறை, சிறிய நீர்ப்பாசனத்துறை, கிராம வளர்ச்சி, பொதுப்பணித்துறை, சட்டத்துறைகளின் மந்திரிகள் மற்றும் அந்த துறைகளின் உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
போலீசார் மறுத்துவிட்டனர்அந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதி மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து குமாரசாமி ஆலோசனை கேட்டார். சக்தி பவனுக்குள் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் கார் வந்தது. ஆனால் காரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். அதனால் காரில் இருந்து இறங்கி அவர் நடந்து உள்ளே சென்றார்.
அதே நேரத்தில் பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் காரை பார்த்ததும் போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் வருகிற 30–ந் தேதி வரை நடக்கிறது.