பள்ளிகொண்டாவில் வாக்குச்சாவடி மையங்களை உதவி கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு
பள்ளிகொண்டாவில் 2 வாக்குச்சாவடி மையங்களை உதவி கலெக்டர் செல்வராசு பார்வையிட்டு ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு,
பள்ளிகொண்டா பேரூ ராட்சியில் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 2 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை உதவி கலெக்டர் செல்வராசு பார்வையிட்டு ‘திடீர்’ ஆய்வு செய்தார். அங்கு குறைபாடுகள் உள்ளதை அவர் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் மேலும் 8 வாக்குச்சாவடி மையங்களை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். வெட்டுவாணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது 11 வீடுகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்களுக்கு எல்லையம்மன் கோவில் பின் புறத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவித்தார்.
ஆய்வின் போது தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் தேவிகலா, கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story