திருவள்ளூர், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நாளை மறுநாள் நடக்கிறது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமையை அனைவரும் உணரும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா கலைக்கல்லூரியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் அந்த கல்லூரி முதல்வரிடம் இருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகளுக்கான தலைப்புகள் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோரின் படைப்புகளை ஒட்டி அமையும்.
கவிதை, கட்டுரை , பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர் ஆவார்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க பதக்கம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், மற்றும் 4 கிராம் தங்க பதக்கம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க பதக்கம் ஆகியவை தமிழக முதல்- அமைச்சரால் சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும். எனவே மேற்படி போட்டிகளில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

Related Tags :
Next Story